அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்டாற்று வெள்ளம்: 150 ஆடுகள், பொறியியல் மாணவர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில்...

News image
Updated On :19 நவம்பர் 2015, 9:13 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் 150 ஆடுகள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன. மேலும் நீர் சுழற்சியில் சிக்கியதில் பொறியியல் மாணவர் ஒருவரும் உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் புதன்கிழமை இரவில் இருந்து தொடர் மழை பெய்தது. இதனால் வியாழக்கிழமை மேற்குத் தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு பகுதியில் திடீர் காட்டாற்று வெள்ளம் வந்தது.

பாப்புராஜா என்பவரின் தென்னந்தோப்பில் ந.கொம்பன், மு.வெள்ளைச்சாமி, பெ.வெள்ளைச்சாமி, பெ.கோவிந்தன், மா.குருசாமி ஆகியோர் ஆடு கிடை போட்டிருந்தார்கள். இதில் சுமார் 500 ஆடுகள் இருந்துள்ளன. திடீரென வெள்ளம் வந்தததில் 120 முதல் 150 ஆடுகள் வரை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் வியாழக்கிழமை மதியம் மம்சாபுரம், மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சதீஷ்குமார் (20) என்பவர் பேமலையான் தடுப்பணையில் தனது நண்பர்கள் மூவருடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட நீர் சுழற்சியில் சிக்கி சதீஷ்குமார் உயிரிழந்தார். இவர் கோயமுத்தூர் பார்க் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மைச் செயலாளர் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை எஸ்.கிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்படவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.