அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேலை வாங்கித் தருவதாக மோசடி: முன்னாள் அரசு வழக்குரைஞர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான பணி நியமன உத்தரவு தயார் செய்து கொடுத்து பண மோசடி செய்ததாக முன்னாள் தமிழக சட்டப் பேரவை தலைவர்

News image
Updated On :29 நவம்பர் 2015, 2:47 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான பணி நியமன உத்தரவு தயார் செய்து கொடுத்து பண மோசடி செய்ததாக முன்னாள் தமிழக சட்டப் பேரவை தலைவர் காளிமுத்துவின் தம்பியும், முன்னாள் அரசு வழக்குரைஞருமான நல்லதம்பி அவரது மனைவி உள்ளிட்ட நால்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், சுந்தரபாண்டியம்-செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ம.தர்மலிங்கம் (32). இவர் சிவகாசியில் தனியார் நிறுவனத்தில் கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரிடம் இதே ஊரைச் சேர்ந்த பெ.சின்னச்சாமி மற்றும் சி.கணேசன் ஆகியோர் வந்து அரசு வேலை பெற்றுத் தருவதாகவும், சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் அரசு வழக்குரைஞராக இருந்து வந்த ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் ஆளும் கட்சியில் மிகுந்த செல்வாக்கு படைத்தவர். பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் என்று கூறி அவரை நம்பவைத்துள்ளார்கள்.

மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிஸ்டம் அனலைஸ்ட் என்ற பணியிடம் காலியாக உள்ளது என்றும், அதற்கு ரூ.4.50 லட்சம் கொடுத்தால் பணி நியமன உத்தரவு பெற்றுத் தருவதாயும் கூறியுள்ளார். இதனை நம்பி தர்மலிங்கம் ரூ.4.50 லட்சத்தை நல்லதம்பி மற்றும் அவரது மனைவி மாலதியிடம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து போலியான அரசு முத்திரையுடன் பணி நியமன உத்தரவை தர்மலிங்கத்திடம் கொடுத்து, தபாலில் இதுபோன்ற மற்றொரு உத்தரவு வரும். அதனை உயர்நிதிமன்ற பதிவாளரிடம் கொடுத்து, பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள்.

ஆனால், நீதிமன்றத்திலிருந்து எந்த தகவலும் வராததால் தர்மலிங்கம் சந்தேகம் கொண்டு, பணம் பெற்றுக்கொண்டவர்களை அணுகி கேட்டுள்ளார். அவர்கள் எந்தவித பதிலும் சொல்லாமல் ரூ.1.50 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார்கள். மீதமுள்ள ரூ.3 லட்சத்தைக் கேட்டபோது, தராமல் ஏமாற்றி வந்துள்ளார்கள். இந்தச் சம்பவங்கள் 5.1.14-ம் தேதிக்கும் 1.12.14-ம் தேதிக்கும் இடையே நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து தர்மலிங்கம், மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகியுள்ளார். நீதிமன்றம், காவல்துறை தென்மண்டல தலைவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

உத்தரவு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவரது உத்தரவு படி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் வேணுகோபால், சனிக்கிழமை நல்லதம்பி, அவரது மனைவி மாலதி, சின்னச்சாமி, கணேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.