டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கடலூரில் அதிமுக நிர்வாகி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை

கடலூரில் அதிமுக நிர்வாகி இன்று அதிகாலை மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :9 அக்டோபர் 2015, 12:39 pm

எஸ்.​ முத்​துக்​கு​மார்

கடலூரில் அதிமுக நிர்வாகி இன்று அதிகாலை மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் துறைமுகம் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பி.சிவா(36), மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர் கடலூர் நகர 38வது வார்டு பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். ஊரின் முக்கிய பிரமுகரான இவர் அப்பகுதியினரிடையே ஏற்படும் சிறு, சிறு பிரச்னைகளை சமரசம் செய்து வைப்பதாகக் கூறப்படுகிறது.

அதேப்போன்று சலங்கைநகர் பகுதியைச் சேர்ந்த சாந்தன் என்பவர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் தவறான உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை சிவா கண்டித்ததாகத் தெரிகிறது. இதில், சிவாவிற்கும், சாந்தனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவா மீன்பிடிப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சிங்காரத்தோப்பு பாலத்தின் கீழே சென்று படகினை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று சிவாவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில், பலத்த காயமுற்ற சிவா சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.

தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிவாவின் சகோதரர் பி.பஞ்சமூர்த்தி(41) கொடுத்த புகாரின் பேரில் சலங்கைநகரைச் சேர்ந்த சாந்தன், சோனாங்குப்பத்தைச் சேர்ந்த அஜய், பிரபாகரன், தமிழ், கௌதம் ஆகியோர் மீது கடலூர் துறைமுகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.