இளம் பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி தாலி செயின் பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் இளம் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி அவர் அணிந்திருந்த தாலி செயினை


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் இளம் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி அவர் அணிந்திருந்த தாலி செயினை பறித்துச் சென்ற இரு இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கலங்காபேரிபுதூரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி லில்லி (35). முருகன் துபாயில் வேலை செய்து வருகிறார். லில்லி முத்துலிங்காபுரம் கண்மாய் தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் கணக்கராக வேலை செய்து வருகிறார். மாலை வேலை முடித்து சைக்கிளில் ஊருக்கு வன்னியம்பட்டி விலக்கு - சத்திரப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விநாயகா பாலி பிளாஸ்கர் கம்பெனி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 30-35 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் லில்லியை வழிமறித்து, மிளகாய் பொடியை கண்ணில் தூவி அவர் அணிந்திருந்த 2 பவுன் எடையுள்ள தங்க தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்களாம்.
இது குறித்து லில்லி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...