அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை முகாம்

விருதுநகரில் சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் 15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி இன்று தெரிவித்தார்.

Updated On :15 செப்டம்பர் 2015, 1:58 pm

விருதுநகரில் சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் 15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி இன்று தெரிவித்தார்.

விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் பிரசவ காலத்தில் குழந்தை உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற இருக்கிறது. இதில், பாலவநத்தம் மற்றும் அ.முக்குளம் சுகாதார நிலையங்களில் வருகிற 15-ம் தேதியும், ஆவுடையாபுரம், முஷ்டக்குறிச்சி ஆகிய சுகாதார நிலையங்களில் வருகிற 22ம் தேதியும், அதைத் தொடர்ந்து கட்டனூர், ஆமத்தூர் ஆகிய சுகாதார நிலையங்களில் வருகிற 29ம் தேதியும் நடத்தப்பட இருக்கிறது.

இம்முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், ரத்தம், சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஆரம்பத்திலேயே சிக்கலான கர்ப்பிணிகளை கண்டறிந்து, அவர்களை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். அதோடு, சிகிச்சையின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. எனவே இம்முகாமில் கிாரமங்களில் உள்ள கர்ப்பிணி பெண்கள் பங்கேற்று பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.