சாத்தூர் அருகே கை காலை கட்டி மனைவியை எரி்த்துக் கொன்ற கணவரை ஆலங்குளம் போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆலங்குளத்தை அடுத்த வலையங்குளத்தைச் சேர்ந்தவர் வேண்டாராஜா(39). இவரது மனைவி காளிஸ்வரி(35). கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த 4 சவரன் நகையை காணவில்லையாம். இதை தனது மனைவிதான் எடுத்திருக்க வேண்டும் என சந்தேகம் அடைந்த வேண்டாராஜா தகராறு செய்து வந்தாராம்.
இதேபோல், நேற்று இரவிலும் நகையை கேட்டு தகராறு செய்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து இதை கண்டித்துள்ளனர். உடனே வீட்டிற்குள் அழைத்துச் சென்று பூட்டினாராம். பின்னர் சிறிது நேரத்திற்கு பின் வீட்டிற்குள்ளிருந்து புகையாக வந்துள்ளது.
பின்னர் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் கதவை உடைக்க முயற்சிக்கையில், வீட்டிற்குள் இருந்து வேண்டாராஜா வெளியேறி ஓடினாராம். அதைத் தொடர்நது உள்ளே பார்க்கையில் கை கால்கள் கட்டப்பட்டு மண்ணெண்ணை ஊற்றி எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தாராம்.
இது தொடர்பாக காளீஸ்வரியின் தந்தை பாண்டியராஜன்(54) ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வேண்டாராஜாவை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

