வெப்பம் அதிகமாக வாட்டும் வேலூர் மாநகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதில் நகரின் பெரும்பாலான சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
வெள்ளிக்கிழமை காலை முதலே வழக்கத்தை விட அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் நள்ளிரவுக்கு பிறகு லேசான மழை பெய்யத் தொடங்கியது. அதை தொடர்ந்து பலத்த மின்னல், இடியுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால் நகரில் பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் புரண்டோடியது.
வேலூர் புதிய பேருந்து நிலையம், பேலஸ் கபே சந்திப்பு, காந்தி சாலை திருப்பம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இதேபோல் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம், காவேரிபாக்கம், குடியாத்தம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதில் கிராமப் பகுதிகளில் ஏராளமான வாழை மரங்கள் சரிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மி.மீட்டரில்):
வேலூர் 57, ஆம்பூர் 52.6, வாணியம்பாடி 40, ஆலங்காயம் 33.8, காவேரிபாக்கம் 36.6, வாலாஜா 25, சோளிங்கர் 16, திருப்பத்தூர் 11.2, ஆற்காடு 46, குடியாத்தம் 59.2, மேல்ஆலத்தூர் 39.4.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

