ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி!

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா சென்னை மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:40 am

DIN

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா சென்னை மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி  உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அக்கட்சியின் புதிய பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் சசிகலா இன்று மாலை சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று மாலை அஞ்சலி செலுத்தினார்.

நினைவிடத்திற்கு வந்த அவர் முதலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நினைவிடத்தை வலம் வந்து வணங்கினார். அவருடனமுதல்வர் ஓ .பன்னனீர்செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.