கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

நெல்லையில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் உலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்
Updated on
1 min read

நெல்லையில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் உலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

முதல் அணு உலையில் நீராவி குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக பிப்ரவரி 4ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனை சரி செய்யும் பணி நடைபெற்று, 7ம் தேதி அணு உலை மீண்டும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணிகள் தாமதமானதால், 14ம் தேதி மாலை மின் உற்பத்தி மீண்டும் துவங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை மின் உற்பத்தி துவங்கியதை அடுத்து, இரவு 10.41 மணியளவில் 413 மெகா வாட்டாக மின் உற்பத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com