ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வங்கி அதிகாரியை தாக்கிய பிகார் எம்எல்ஏ மீது வழக்கு

பிகாரில் கடிஹார் மாவட்டத்தில் உள்ள வங்கியின் அதிகாரி ஒருவரை தாக்கியதாக அம்மாநில எம்எல்ஏ மெஹ்பூப் ஆலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :30 ஜூலை 2016, 8:54 am

கடிஹார்: பிகாரில் கடிஹார் மாவட்டத்தில் உள்ள வங்கியின் அதிகாரி ஒருவரை தாக்கியதாக அம்மாநில எம்எல்ஏ மெஹ்பூப் ஆலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலகாபாத் வங்கியின் அதிகாரி ராகேஷ் ரஞ்சன், காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், எம்எல்ஏ ஆலம், வங்கிக்குள் நுழைந்து தன்னை தாக்கி, வங்கியை மூடுமாறு மிரட்டியதாகவும், பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எம்எல்ஏவிடம் கேட்ட போது, இந்த புகார் முற்றிலும் உண்மையில்லாதது, வங்கி அதிகாரி என் மீது புகார் அளித்தால், அவர் மீது நான் புகார் அளிப்பேன், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே வங்கிக்குச் சென்றேன், வங்கி அதிகாரி ஊழல் வாதி என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.