பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் நிலுவையிலுள்ள 17,340 மெகாவாட் மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Updated On :14 ஜூன் 2016, 12:26 pm

தமிழகத்தில் நிலுவையிலுள்ள 17,340 மெகாவாட் மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

 2016-17 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக முன்னேறி விட்டதாக மத்திய மின்சார ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய மின் ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் தவறான புள்ளி விவரங்களை அளித்ததன் காரணமாகவே இல்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இன்றைய நிலையில் தமிழகத்தின் மொத்த மின்தேவை சுமார் 15,500 மெகாவாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு சுமார் 4,750 மெகாவாட் மட்டுமே. மத்தியத் தொகுப்பிலிருந்தும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலிருந்தும் 4,500 மெகாவாட் மின்சாரமும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5,426 மெகாவாட் மின்சாரமும் வாங்கப்படுகிறது.

 மின்தேவையில் மூன்றில் இரு பங்கை மத்திய அரசிடமிருந்தும், தனியாரிடமிருந்தும் வாங்கும் நிலையில், தமிழகத்தை மின்மிகை மாநிலம் என்று கூற முடியுமா

 தமிழகத்தில் எண்ணூர், உப்பூர், உடன்குடி, செய்யூர், கடலாடி ஆகிய இடங்களில் மொத்தம் 17,340 மெகாவாட் மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றைச் செயல்படுத்தாமல் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது.

 எனவே, அடுத்து வரும் 5 ஆண்டுகளிலாவது நிலுவையில் உள்ள 17,340 மெகாவாட் மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.