சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

எழும்பூரில் பெண்ணின் கழுத்து, காதை அறுத்து நகை கொள்ளை

சென்னை எழும்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த பெண் ஒருவர் கழுத்து, காது அறுத்து கொலை செய்யப்பட்டது நேற்று இரவு தெரியவந்தது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

சென்னை எழும்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த பெண் ஒருவர் கழுத்து, காது அறுத்து கொலை செய்யப்பட்டது நேற்று இரவு தெரியவந்தது.

எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ-அப் டெக்ஸ் அருகே உள்ளது பாந்தியன் லேன் இங்கு பிரதான சாலையையொட்டி உள்ள 9 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தம் 61 வீடுகள் உள்ளன. இதன் 3-ஆவது தளத்தில் வசித்து வந்தவர் சாரதா (70) கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், கடந்த ஓராண்டாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவரது சகோதரர் மகள் தான்யா நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு துணையாக இருப்பதற்காகவே கேரளாவில் இருந்து சாரதா வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தன்யா கல்லூரிக்குச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சாரதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. காதுகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.

இதைப் பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்த தான்யா கூச்சல் போட்டார். அவரது அலறல் சதத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் திரண்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடத்திய விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. அவரது காதில் அணிந்து இருந்த நகைகள் கொள்ளை போய் இருந்தன. வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளைபோனதாகக் கூறப்படுகிறது.  இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.