ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு: மார்ச் 7 வரை நகைக் கடைகள் மூடல்

தங்கம் மீதான ஒரு சதவீத கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திங்கள்கிழமை வரை (மார்ச் 7) தமிழகம், புதுச்சேரியில் 35 ஆயிரம் நகைக் கடைகள் மூடப்படும் என

News image
Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தங்கம் மீதான ஒரு சதவீத கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திங்கள்கிழமை வரை (மார்ச் 7) தமிழகம், புதுச்சேரியில் 35 ஆயிரம் நகைக் கடைகள் மூடப்படும் என, சென்னை வைரம் மற்றும் தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி தெரிவித்தார்.
 இரண்டு லட்சத்துக்கு மேல் நகை வாங்குவதற்கு கட்டாய பான் அட்டை, தங்கம் மீதான ஒரு சதவீத கலால் வரி விதிப்பு என்ற மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் புதன்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு நகைக் கடை உரிமையாளர்கள் போராட்டத்தை அறிவித்தனர்.
 அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள சுமார் 35 ஆயிரம் தங்க நகைக் கடைகளும் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், சென்னை சேத்துப்பட்டில், வைரம், தங்கம் வியாபாரிகள் கலந்தாலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வைரம், தங்க நகைக் கடைகள் உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 அதன் பின்னர், செய்தியாளர்களிடம் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது: தமிழகம் உள்பட நாடு முழுவதும் 3-ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள சுமார் 35 ஆயிரம் தங்க நகைக் கடைகளும், சென்னையில் மட்டும் சுமார் 7 ஆயிரம் நகைக் கடைகளும் போராட்டத்தில் பங்கேற்றன.
 ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தால், மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய 10 சதவீதம் சுங்க வரியும், ஒரு சதவீத வாட் வரியும் வருவாய் இழப்பாகும். கடந்த மூன்று நாள்கள் நடைபெற்ற போராட்டத்தால் மட்டும் சுமார் ரூ.1,000 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லிக்குச் சென்று, எங்களது கோரிக்கைகள் குறித்து தெரியப்படுத்தி உள்ளோம்.
 இருப்பினும், மத்திய அரசு தரப்பில், இதுவரை சாதகமான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆகையால், மார்ச் 7-ஆம் தேதி வரை நகைக் கடைகளை அடைத்து போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.