தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தமிழக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. எனவே, மத்திய அரசு அதிகாரிகளை நியமித்து, திமுகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி ஏஜென்ட்டுகள் முன்னிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட தமிழக இறுதி வாக்காளர் பட்டியலை கள ஆய்வு செய்து மீண்டும் சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜரானார். இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பெறப்பட்ட விண்ணப்பங்கள், அதனடிப்படையில் செய்யப்பட்ட பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட சில தகவல்களும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை; வெற்றி யாருக்கு?

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவு; பலரும் அறிந்திராத விராட் கோலியின் 18 சாதனைகள்!

இங்கிலாந்திலிருந்து மீட்டு வரப்பட்ட பழமையான சிலையைப் பார்வையிட்ட முதல்வர்!

ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் பெயர் மாற்றம்!
விடியோக்கள்


