சென்னை: வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் மனுக்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் வரும் 19-ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி ஆகியவை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாயன்று தொடங்கியது. மூன்று தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நேற்றுதான் கடைசி நாளாகும்.
இதனைத் தொடர்ந்து வேட்பு மனுபரிசீலனை இன்று நடைபெற்றது. மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்று கொள்ளப்பட்டன.
இது போல் புதுச்சேரி நெல்லிதோப்பு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமியின் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



