தமிழகத்தில் அதிகளவில் ஜெர்ஸி பசுக்களைக் கொண்டு பால் வியாபாரத்தை அதிகரிக்கத் தடையாக உள்ள நாட்டு மாடுகள் இனத்தை அழிப்பதற்காகவே, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக இயற்கை வேளாண் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் நாட்டு மாடுகளின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருள்களின் மூலத்திலிருந்தே பூச்சிக்கொல்லி, உரம், பஞ்சகாவியா போன்ற இயற்கை விவசாயத்துக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், ஐரோப்பிய இனமான ஜெர்ஸி வகை மாடுகளின் சாணத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன் தராது.
இயற்கை விவசாயத்துக்கு உதவும் மாட்டினங்களை அழிப்பதற்காக, ஐரோப்பியர்கள் இந்தியா முழுவதும் வெண்மைப் புரட்சி என்ற திட்டத்தைச் செயல்படுத்தி, கிராமங்களுக்குச் சென்று ஜெர்ஸி பசுக்களை விநியோகித்தனர். இதனால், வட மாநிலங்களில் படிப்படியாக நாட்டு மாடுகள் அழிந்தேவிட்டன.
ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்ததால் காளைகள் காப்பாற்றப்பட்டு வந்தன. தமிழகத்திலும் ஜெர்ஸி பசுக்களின் ஆதிக்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, ஜல்லிக்கட்டுக்கு தடையாணை பெறப்பட்டுள்ளதாக இயற்கை வேளாண் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்படுவதால், காளை மாடுகள் இறைச்சிக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், இயற்கையான கருத்தரிக்கும் முறை குறைந்து, பசுக்களுக்கு ஊசி மூலம் விந்தணுக்கள் செலுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட நாட்டு மாடுகளின் விந்தணுக்கள் குறைந்து வருகின்றன. எனவே, பால் கறவையை அதிகரிக்க இப்போது வெளிநாடுகளில் இருந்து ஜெர்ஸி காளைகளின் விந்தணுக்கள் வாங்கப்படுகின்றன.
அந்த விந்தணுக்கள் வாங்கப்பட்டு, கலப்பின முறையில் செயற்கையாகக் கருத்தரிக்கும் முறை கையாளப்பட்டு வருகிறது. இதன்மூலம் புதிய இனம் உருவாகிறது, மேலும், பண்ணைகளுக்கு அதிகப்படியான பாலையும் பசுக்கள் அளிக்கின்றன. இன்னும் சில பண்ணைகளில் பசுக்களின் கழுத்தில் ஊசியைக் செலுத்தி அதன் ரத்தத்தை பாலாக்கும் முயற்சியும் கண்டறியப்பட்டுள்ளது. பாலின் வகைகள் ஏ1, ஏ2 என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக ஏ2 வகையான பாலையே சுரக்கின்றன. மனித இனத்தின் தாய்ப்பாலும் இந்த ஏ2 வகையைச் சேர்ந்ததாகும். இயற்கையாக உருவாகும் இவ்வகையான பாலைத்தான் மனிதர்களால் செரிக்க இயலும். ஆகவே, இதே வகை பாலை சுரக்கும் பசுவின் பாலை நாம் பயன்படுத்த ஆரம்பித்தோம்.
ஆனால், பால் வியாபாரம் உலகமயமான பிறகு, ஐரோப்பாவில் அதிகமாகப் பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு செய்து, அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
கன்றைப் பார்க்கும்போது தாய் மாட்டுக்கு இயக்குநீர் (hormone) சுரந்து, அது பாலை சுரக்கத் தூண்டும். ஆனால், இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால், மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாகச் செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர்.
இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீரின் அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈஸ்ட்ரோஜென் (உள்ற்ழ்ர்ஞ்ங்ய்). இது பெண்ணிய இயல்பைத் தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈஸ்ட்ரோஜென் கலந்த ஏ1 பாலை அருந்தும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள். தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் ஏ2 பாலை சுரக்கக் கூடியவை. இவை பாலை குறைந்த அளவே சுரந்தாலும், அது நமது உடலுக்கு எந்தவிதத் தீங்கையும் உண்டாக்குவதில்லை.
மாட்டிறைச்சிக்கு வரவேற்பு: நம் நாட்டு மாடுகள் நோய்த் தடுப்பு ஊசிகள், மாத்திரைகள் இல்லாமல் இயற்கையான முறையில் வளர்க்கப்படுகின்றன. எனவே, இவற்றின் இறைச்சிக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதால், வணிகப் போட்டியில் நம் நாட்டு மாடுகள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இறைச்சிக்காக நாட்டுக் காளைகள் அழிக்கப்பட்டுவிட்டால், பிறகு வெளிநாட்டு இன மாடுகளை இந்தியாவுக்கு எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும். பின்னர், வெளிநாட்டு மாட்டு இனங்களை வளர்ப்பதற்கான மருந்துகளையும் இங்கு விற்பனை செய்ய முடியும்.
இதுகுறித்து சேனாபதி காங்கயம் காளைகள் ஆராய்ச்சி மையத்தின் (திருப்பூர்) நிர்வாக இயக்குநர், கார்த்திகேயா சிவசேனாபதி கூறியதாவது:
மத்திய அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே இனி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் முயற்சிகள் முடிந்துவிட்டன. மத்திய அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை கொண்டு வரலாம். ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி இருந்தால், தமிழகத்துக்குச் சாதகமாக இருந்திருக்கும். ஜல்லிக்கட்டுக்கு தடை வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பீட்டா, புளு கிராஸ், விலங்குகள் நல வாரியம் ஆகியவை பிரபல வழக்குரைஞர்களைக் கொண்டு மிகுந்த செலவு செய்து வாதிட்டன. எங்களால் அப்படி பெரிய அளவில் செலவு செய்ய முடியவில்லை என்றார் அவர்.
அதிவேகத்தில் குறையும் காங்கயம் மாடுகள்
தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் எருது விடுதல் என்னும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஜல்லிக்கட்டு மாடுகள் மட்டுமன்றி, அந்த நோக்கத்துக்காகத் தயாராகும் ஆயிரக்கணக்கான மாடுகள் கன்று பருவத்திலேயே இறைச்சிக்காக விற்கப்பட்டு வருகின்றன.
1990 -ஆம் ஆண்டில் தமிழகத்தில் காங்கயம் இன மாடுகளின் எண்ணிக்கை 11,74,000-ஆக இருந்தது. 2000-ஆம் ஆண்டில் இவை 4,40,000-ஆகக் குறைந்தன. இப்போது 1.25 லட்சம் காங்கயம் மாடுகள் மட்டுமே இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்

4.4.1976: காமராஜுக்கு 'பாரத ரத்னா' விருது: அவரது சகோதரி ராஷ்டிரபதியிடம் பெற்றார்
வங்கி மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


