/

புதுச்சேரி தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

புதுச்சேரி லாட்ஜில் சென்னையை சேர்ந்த தந்தை, தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2016, 6:02 am

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி லாட்ஜில் சென்னையை சேர்ந்த தந்தை, தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள லாட்ஜில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நேற்று அறையில் எடுத்து தங்கினர். இன்று இரவு வரை 3 பேரும் வெளி வராததால் லாட்ஜ் ஊழியர்கள் உருளையன்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதன் பேரில் அங்கு போலீசார் விரைந்து வந்து அறைக்குள் சென்று பார்த்த போது 3 பேரும் விஷம்  குடித்து தற்கொலை செய்துகொண்டிருருப்பது தெரியவந்தது.  

போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர்கள் சென்னை   போரூர் லட்சுமி நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் அவரது மனைவி துளசி, மகன் பாலமுருகன் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்பு அவர்கள் எழுதி வைத்து இருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எங்களது சாவிற்கு யாரும் காரணமில்லை. வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொண்டோம். விசாரணை என்ற பெயரில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தது.

3 பேரில் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 பேர் தற்கொலை சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.