/

நவம்பர் 12-இல் புதுச்சேரி-சந்திரகாச்சி இடையே சுவிதா சிறப்பு ரயில்

புதுச்சேரி-சந்திரகாச்சி இடையே (சென்னை எழும்பூர் வழியாக) சுவிதா சிறப்பு ரயில் வரும் நவம்பர் 12-ம் தேதி இயக்கப்படுகிறது.

News image
Updated On :21 அக்டோபர் 2016, 11:35 am

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி-சந்திரகாச்சி இடையே (சென்னை எழும்பூர் வழியாக) சுவிதா சிறப்பு ரயில் வரும் நவம்பர் 12-ம் தேதி இயக்கப்படுகிறது.

புதுவையில் இருந்து சுவிதா ரயில் நவம்பர் 12-ம் தேதி காலை 7.15 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சென்றடையும்.

இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள்-2, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி-1, தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள்-7, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள்-6, சரக்கு மற்றும் பிரேக் வேன் பெட்டிகள்-2 உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.

நிறுத்தங்கள்: சுவிதா ரயில் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடுர், நெல்லூர், ஒங்கோல், சிராளா, தெனாலி, விஜயவாடா, எலூரு, தாடேபள்ளிகூடம், ராஜமன்றி, சாமல்கோட்டை, துவ்வாடா, விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ரோடு, பலாசா, பிரமாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பத்ரக், பாலசோர், கரக்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.