சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சகோதரிகளான பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும், சசிகலா புஷ்பா குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த வழக்கில், பணிப் பெண்களுக்கு ஆதரவாக வாதாடி வந்த திசையன்விளையைச் சேர்ந்த வழக்குரைஞர் சுகந்தி ஜெய்சன் வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக, திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்களான நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், ராமலிங்கம், சத்ய சித்திரைக்குமார் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில், சசிகலா புஷ்பா, ஹரி நாடார், ராமலிங்கம் மற்றும் சத்ய சித்திரைக்குமார் உள்ளிட்டோரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் மீண்டும் ஜாமீன் வழங்கக் கோரி ராமலிங்கம் மற்றும் சத்ய சித்திரைக்குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கினால் அவர்கள் வெளியே சென்று சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்திருப்பதை புறக்கணிக்க முடியாது என்று கூறி, இருவரது ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

ஹண்ட்ரட் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்; ஆசிய கோப்பையில் விளையாடுவாரா?

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 8- நேரலை!

”காவிரி பிரச்னைக்கு அனைத்து கட்சிக் கூட்டம் வேண்டும்!” முத்தரசன் பேட்டி
விடியோக்கள்

காவிரி பிரச்னையை திசைதிருப்பவா Delimitation? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி


