நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் ஆணை: இரா.முத்தரசன் வரவேற்பு
நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.


நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை உடனடியாக (31.03.2017) மூடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமுல்படுத்திட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்து ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தற்போது உச்ச நீதிமன்ற உத்திரவால் 3321 கடைகள் இன்று முதல் மூடப்பட உள்ளது. மீதமுள்ள மதுபானக் கடைகளையும் விரைவில் மூடுவதற்கு மாநில அரசு முன்வர வேண்டும்.
மதுபானக் கடைகள் மூடப்படும் அதே நேரத்தில், இங்கு பணி புரிந்து வரும் பணியாளர்களின் எதிர்கால வாழ்க்கை நலனை அரசு கவனத்தில் கொண்டு, அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...