நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆளுநர் கிரண்பேடி உத்தரவு: நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் மீண்டும் பணியில் சேர்ந்தார்

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நகராட்சி ஆணையர் சந்திர சேகரன் இன்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 5:25 am

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நகராட்சி ஆணையர் சந்திர சேகரன் இன்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.

அதிமுக எம்எல்ஏ கொண்டுவந்த உரிமை மீறல் பிரச்னை காரணமாக, சந்திர சேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் படிக்க: சந்திரசேகரனை ஆணையர் பதவியில் தொடர கிரண் பேடி அறிவுறுத்தல்

அவருக்கு பதிலாக கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கணேசனுக்கு கூடுதலாக அப்பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே சந்திர சேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைத்து தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.  ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவின் பேரில் மீண்டும் ஆணையராக சந்திரசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.