உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார்.


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வானதால், மூத்த நீதிபதியான ஹூலுவாடி ரமேஷ் தலைமை நீதிபதிக்கான பொறுப்புகளை கவனித்து வந்தார். தில்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் 31-ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணிளவில் இந்திரா பானர்ஜிக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் மூத்த நீதிபதிகள், வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் 2வது பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...