தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: விடுமுறையும் ரத்து

சென்னையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக புதன்கிழமை (ஏப்.12) தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On :10 ஏப்ரல் 2017, 9:08 pm

சென்னையில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக புதன்கிழமை (ஏப்.12) தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை (ஏப்.12) நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்தத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், வேறு இடங்களுக்குச் சென்று பணிபுரியும் அந்தத் தொகுதியின் வாக்காளர்களுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இடைத் தேர்தலுக்காக அந்தத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஏப்.12) அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.