வருமான வரித்துறை சோதனைக்கும் தேர்தல் ரத்துக்கும் தொடர்பில்லை: டி.டி.வி.தினகரன் 'அடடே' பேட்டி!
அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கும் தேர்தல் ரத்துக்கும் தொடர்பில்லை ...


சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கும் தேர்தல் ரத்துக்கும் தொடர்பில்லை என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டியளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சியின் தவேட்பாளராக டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். வாக்காளர்களுக்கு சரளமாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் நேற்றிரவு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று காலை அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் 'திடீர்' ஆலோசனை நடத்தினார்.
இந்தச் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்பபொழுது அவர் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து என்பது ஒரு திட்டமிட்ட நாடகமாகும். தேர்தலில் எனது வெற்றி உறுதி என்பது தெரிந்தவுடன், தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகள் எடுத்த முயற்சிகளின் விளைவே இது.
அதே போல் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு, தேர்தலை நிறுத்தி வைப்பதற்கும் என்ன அவசியம் என்பது புரியவில்லை. இந்த தேர்தல் ரத்து நடவடிக்கையானது திமுக, பாஜக மற்றும் பன்னீர் அணியினரின் விஷம சதியாகும்.
மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கும் தேர்தல் ரத்துக்கும் தொடர்பில்லை. ஆர்.கே.நகரில் எதிர்கட்சிகள் கூறுவது போல அதிமுக எந்த வித பணப்பட்டுவாடாவிலும் ஈடுபடவில்லை., இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட பரப்புரைகளை மக்கள் புறக்கணித்து விட்டனர்.
அரசியலைப்பொருத்த வரை ஒவ்வொரு விஷயமும் ஒரு அனுபவம் தான், அதிலிருந்துதான் தேவையான பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தினகரன் தனது பேட்டியில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...