அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது
சென்னையில் அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகள் என முறையே 3 நாட்கள் நடைபெறுகிறது.


சென்னை: சென்னையில் அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகள் என முறையே 3 நாட்கள் நடைபெறுகிறது.
இதையடுத்து அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னை அதிமுக தலைமை அலுவலகம் வரவும், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் அதிமுக தலைமை அலுவலகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைவது குறித்த முக்கிய பேச்சு இன்று துவங்கவுள்ள நிலையில், அவசர, அவசரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் நோக்கர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், கட்சியின் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...