புது தில்லி: தேடப்படும் நபராக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அறிவித்து உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும், கார்த்தி சிதம்பரம் குறித்து 'லுக் அவுட் சர்குலர்' அனுப்பியுள்ளது.
ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு பெற்றுத் தந்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அன்னிய செலாவணி மோசடி வழக்குகளில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் பலத்த காயம்

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

பள்ளிகளிளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும்! சிவகாசி காங். வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


