பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இயக்கத்தில் குழப்பதை ஏற்படுத்தவே புது நிர்வாகிகள் நியமனம்: அமைச்சர் உதயகுமார்

நன்றாக செயல்பட்டு வரும் இயக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்துள்ளதாக தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2017, 7:23 am


மதுரை: நன்றாக செயல்பட்டு வரும் இயக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்துள்ளதாக தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், தினகரன் தன்னை முன்னிலைப்படுத்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நன்றாக செயல்படும் இயக்கத்தில் குழப்பத்தை ஏற்படுததும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் நடந்துள்ளது. 

தகுதியானவர்களுக்கு பதவி தந்தது சரியானதுதான். ஆனால், நியமன முறை சரியில்லை. அதிமுகவில் கிளைச் செயலர் பதவியைக் கூட யாரும் ஏற்க மறுப்புத் தெரிவித்ததில்லை.  ஆனால், தற்போது கேலிக்கூத்தாகும் வகையில் தினகரன் நியமித்த பதவியை நிராகரித்து வருகின்றனர்.

அணிகள் இணைப்புக்கு யாருமே காலத்தை நிர்ணயிக்க முடியாது. அதில்லாமல், இந்திய அரசியலில் உடைந்த இயக்கம் ஒன்று மீண்டும் சேர்ந்ததாக வரலாறே இல்லை.  அதுபோன்று உடைந்த இயக்கத்தை ஒன்று சேர்த்த பெருமை மறைந்த ஜெயலலிதாவுக்கு உண்டு.

அதுபோலத்தான், அரசியலில் எதுவும் நிரந்தரம் கிடையாது. இவ்விரு கட்சிகளும் இணைந்து பணியாற்றும் காலம் கூடி வர மேலும் அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.