சென்னை: மதுரை மேலூரில் டிடிவி. தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதிமுகவில் உள்ள அனைவருமே சின்னத்தை மீட்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
அதிமுகவில் பிளவு என்பது இல்லை. பிளவு ஏற்பட்டிருந்தால் தேர்தல் வந்திருக்கும். அந்த நிலை வரவில்லை. நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் எண்ணம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போதே சட்டப்பேரவையில் ஸ்டாலின் செய்தது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
அப்போதே, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர்கள். தற்போது மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
அதிமுக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கட்சி. அதை எவராலும் கலைக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், மதுரை மேலூரில் டிடிவி. தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என்று தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் தில்லி செல்கிறேன். இதனால் எந்த கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எல்லோரும் கொண்டாடலாம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


