குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கிறார் கமல்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
குழம்பிய குட்டையில் கமல் மீன்பிடிக்க முயற்சிப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.


குழம்பிய குட்டையில் கமல் மீன்பிடிக்க முயற்சிப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்போரில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள். எண்ணிக்கையை பொருத்தவரையில் நாங்கள் தனி மெஜாரிட்டியுடன் இருக்கிறோம்.
காழ்ப்புணர்ச்சியால் சிலர் கருத்து கூறுகின்றனர், நாங்கள் பெரும்பான்மையுடன் உள்ளோம். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை வருவாய்த்துறை சார்பில் 32 மாவட்டங்களில் நடத்த திட்டம். முதற்கட்டமாக மதுரையில் நடைபெற்றது. இன்று கடலூரில் நடைபெறுகிறது.
கர்நாடகாவில் அரசியல் செய்யத்தான் புகழேந்திக்கு அனுமதி தரப்பட்டுள்ளது? தமிழகத்தில் அல்ல. இரு அணிகள் அணைவதற்கான முகூர்த்த தேதி இன்னும் முடிவாகவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...