திமுக தலைவர் கருணாநிதி இன்று டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம்
திமுக தலைவர் கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் கருணாநிதி இன்றே வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று அதிகாலை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டடார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டது. கருணாநிதியுடன் ராசாத்தி அம்மாள், கனிமொழி, தமிழரசு மற்றும் செல்வி ஆகியோர் உடன் உள்ளனர். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சிறிய அளவிலான சிகிச்சைக்காகவே கருணாநிதி அனுமதி என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் தொண்டையில் உள்ள உணவு செலுத்தும்(PEG) மாற்றப்பட்டு கருணாநிதி வீடு திரும்புவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...