வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்


தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக பகுதிகளில் 80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
ஜெயங்கொண்டம் 50 மி.மீ , குடவாசல், கோபிசெட்டிபாளையம், வலங்கைமான் ஆகிய இடங்களில் தலா 40 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், திருமானூர், பொன்னேரி, பெரம்பலூர், நுங்கம்பாக்கத்தில் தலா 30 மி.மீ., மீனம்பாக்கம், சிதம்பரத்தில் தலா 20 மி.மீ பதிவாகியுள்ளது. இனிவரும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றார் அவர்.
6 ஆண்டுகளில் பதிவான அதிக மழை: தென்மேற்கு பருவமழையை பொருத்தவரை கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 210 மி.மீ., பதிவாகியுள்ளது.
இது இந்த காலகட்டத்தில் (ஜூன் 1 முதல் ஆக. 17) பெய்யும் மழையின் இயல்பான அளவைவிட 33 சதவீதம் அதிகமாகும். மேலும் இது, கடந்த 6 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை அளவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...