இரு அணிகளும் இணைந்தால் அதிமுகவுக்கு நல்லது: பொன். ராதாகிருஷ்ணன்
இரு அணிகளும் இணைந்தால் அதிமுகவுக்கு நல்லது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இரு அணிகளும் இணைந்தால் அதிமுகவுக்கு நல்லது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. நினைவு இல்லம் விவகாரத்தில் ஜெயலலிதா உறவினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் இரு அணிகளும் இணைந்தால் அதிமுகவுக்கு நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 44 ஆண்டுகளாக வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இதையடுத்து அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...