அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அதிமுக அம்மா அணி சிறப்பாக செயல்படுகிறது: டிடிவி அணி எம்எல்ஏ சுந்தர்ராஜன் பேட்டி

டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக அம்மா அணி சிறப்பாக செயல்படுகிறது என அதிமுக எம்எல்ஏ சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:41 pm

DIN

சென்னை: டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக அம்மா அணி சிறப்பாக செயல்படுகிறது என அதிமுக எம்எல்ஏ சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

சென்னை டிடிவி தினகரன் இல்லத்தில் தினகரனை சந்தித்து பேசிய பின்னர் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வேதா இல்லாம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்பதையும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதையும் வரவேற்கிறோம் என்று கூறினார்.

அதிமுக அம்மா அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுச் செயலாளர் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அதிமுக தொண்டர்களை யாரும் ஏமாற்ற முடியாது. 10 அல்லது 20 பேரை வைத்துக்கொண்டு யாரையும் நீக்க முடியாது என்று கூறினார்.

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தினால் அச்சமில்லை என்று கூறிய அவர், ஜெயலலிதா வழியில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வதில் தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

எம்எல்ஏக்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, சுந்தர்ராஜன், சுப்பிரமணியன், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.