பலகட்ட காத்திருப்புகளுக்குப் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இரு அணிகளின் இணைப்பு நிகழ்வானது, ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் இருவரும் பேசிய பிறகு கட்சி பதவிகள் தொடர்பாகவும், தமிழக அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தின் துணை முதல்வராகவும், அதிமுக வழிகாட்டல் குழு ஒருங்கிணைப்பாளராகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார். அத்துடன் மாநிலங்களவை உறுப்பினரான வைத்திலிங்கம் இந்த குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.