ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இபிஎஸ் - ஓபிஎஸ்ஸால் பொதுக்குழு கூட்ட முடியுமா?: தங்கத் தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ கேள்வி

இபிஎஸ்-ஓபிஎஸ்ஸால் பொதுக்குழு கூட்டி முடிவெடுக்க முடியுமா என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்கத்தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2017, 7:54 am

தினமணி

இபிஎஸ்-ஓபிஎஸ்ஸால் பொதுக்குழு கூட்டி முடிவெடுக்க முடியுமா என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்கத்தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுவை அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2 நாள்களாக தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் விடுதிக்குள்ளேயே நடைபயிற்சி, மேற்கொண்டு உணவு உண்டு பொழுதை கழித்து வரும் நிலையில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வான தங்கத்தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் எடப்பாடியை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிம் வைத்துள்ளோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். எங்களது ஒற்றுமையை காண்பிப்பதற்காகவே புதுச்சேரியில் 3 நாட்கள் தங்கியிருக்க வந்துள்ளோம்.

நாங்கள் சுதந்திரமாக உள்ளோம். எங்களை யாரும் அடைத்து வைக்கவில்லை. ஊடகங்கள் எங்களை தவறாக சித்தரிக்கின்றனர். அது தேவையற்றது. மிக விரைவில் எடுத்த சபதத்தை முடிப்போம்...அனைவரும் பொறுத்திருந்து பாருங்கள், நல்ல செய்தி வரும்.

இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோர் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கினால் துணிச்சலானவர்கள். பொதுக்குழுவை கூட்டினால் அதிக பெரும்பான்மையை அவர்கள் காட்ட வேண்டும். அப்போது தான் யார் பக்கம் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர் என்று தெரியும். 

பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு

ஓய்வெடுப்பதற்காக நாங்கள் மூன்று நாட்கள்  புதுச்சேரி வந்துள்ளோம். இங்கிருந்தபடியே தொகுதி மக்களின் பணிகளை செய்துகொண்டிருக்கிறோம். பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

பொதுச்செயலாளர் சசிகலா கூட்டினால் தான் அது உண்மையான பொதுக்குழு. பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய பிறகு அவர்கள் தான் முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஆட்சியை கலைப்பது எங்கள் நோக்கம் அல்ல, அம்மா ஆட்சி நீட்டிக்க வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நம்பக்கத்தன்மையான தலைமை வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.