டிடிவி தினகரன் இன்று புதுவை வருகை: ஆதரவு எம்எல்ஏ-க்கள் இடமாற்றம்
டிடிவி தினகரன் இன்று புதுச்சேரி வருகிறார். இதையடுத்து அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் வேறு சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டனர்.


தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரிந்து செயல்பட்ட இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்தன. மேலும், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் பதவியேற்றனர்.
ஆனால், இதற்கு டிடிவி தினகரன் தரப்பில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஆளும் அதிமுக ஆட்சியின் மீதான ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதனால் அதிமுக கொறடா அந்த 19 எம்எல்ஏ-க்கள் மீதும் சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதன்காரணமாக சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏ-க்களும் புதுச்சேரியின் சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதியில் பதிவு செய்திருந்த காலம் முடிவடைந்ததால் அவர்கள் அனைவரும் 100 அடி சாலையில் உள்ள வேறு நட்சத்திர சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், இவர்களைச் சந்திக்க டிடிவி தினகரன் இன்று புதுச்சேரி வருவதாக இடமாறும் போது செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...