ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நடவடிக்கையைக் கண்காணிக்க மத்திய உளவுத் துறை அதிகாரிகள் குழு வருகை

புதுவையில் தனியார் ஓட்டலில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நடவடிக்கையை கண்காணிக்க மத்திய உளவுத் துறை அதிகாரிகள் குழு வந்துள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2017, 7:12 am

தினமணி

புதுவையில் தனியார் ஓட்டலில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நடவடிக்கையை கண்காணிக்க மத்திய உளவுத் துறை அதிகாரிகள் குழு வந்துள்ளது.

இபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பை எதிர்த்து வரும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடந்த 5 நாள்களாக புதுவையில் தங்கி உள்ளனர். ஏற்கெனவே
சின்னவீராம்பட்டினத்தில் தனியார் விடுதியில் 3 நாள்கள் தங்கி இருந்த 18 எம்.எல்.ஏக்கள் வெள்ளிக்கிழமை 100 அடி சாலையில் உளள ஓட்டலுக்கு இடம்
பெயர்ந்தனர். இதற்கிடையே ஓட்டலிலேயே எம்.எல்.ஏக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ.
தினகரன் தரப்புக்கு ஆதரவு தரும் வகையில் விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் சனிக்கிழமை புதுவை ஓட்டலுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

இதனால் தற்போது ஓட்டலில் உள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அவர் ஓட்டலில் தங்கியுள்ள மற்ற எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய உளவுத் துறை அதிகாரிகள்
இதற்கிடையே இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக மேலும் பல எம்.எல்.ஏக்களை வளைக்கும் முயற்சியில் தினகரன் தரப்பு இறங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

இதற்காக பணபேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தகவல்கள் வெளியானதால் மத்திய உளவுத் துறை அதிகாரிகள் குழுவினர் புதுச்சேரிக்கு வந்து முகாமிட்டுள்ளனர். ஓட்டலில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எவருடன் பேசுகின்றனர். சந்திக்கின்றனர் என அவர்களது செயல்பாடுகளை
கண்காணித்து வருகின்றனர்.

ஆளுநர் நல்ல முடிவெடுப்பார்-ஜக்கையன்
தமிழக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக  கம்பம் தொகுதியின் எம்.எல்.ஏ. ஜக்கையன் தெரிவித்துள்ளார்.

நடைபயிற்சியில் இருந்த கம்பம் ஜக்கையன் கூறியதாவது:
தமிழக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன். அதிமுக ஆட்சி தொடர வேண்டிய ஆட்சி,நிச்சயமாக தொடரும். ஆனால் இபிஎஸ் முதல்வராக நீடிக்கக் கூடாது.  அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் ஆட்சி தொடரும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.