புதுதில்லி: தென் தமிழக கடல் பகுதிகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கிய ஒக்கி புயலின் தாக்கம் குறித்து கன்னியாகுமரியில் வீடுவீடாக ஆய்வு நடத்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மாநில நிதி அமைச்சர்களின் மாநாட்டில் பங்கு பெறுவதற்காக தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தில்லி சென்றுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தென் தமிழக கடல்பகுதிகளை ஒக்கி புயல் கடும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதன் முழுமையான தாக்கம் குறித்து அறியும் பொருட்டு கன்னியாகுமரியில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்படும். இதன் மூலம் உடைமைகள் குறித்த சேதமானது துல்லியமாகத் தெரிய வரும். இதன் அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதல்வர் மூலம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். எந்த காரணத்தினாலும் மாநில அரசின் உரிமைகள் வீட்டுக் கொடுக்கப்பட மாட்டாது
ஒக்கி புயலினைப் பொறுத்த வரை இதுவரை 14 மீனவர்கள் உயிரிழந்ததாகவும், 40 படகுகள் மற்றும் 433 மீனவர்களைக் காணவில்லை என்று மத்திய உள்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இவ்வாறு கூறிய அமைச்சர் ஜெயகுமாரிடம், ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவார் என்று வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பு பற்றிக் கேட்ட பொழுது, அவையெல்லாம் கருத்துக் கணிப்புகள் அல்ல; கருத்துத் திணிப்புகள் என்று அவர் பதிலளித்தார்.
இறுதியாக மத்திய அரசின் வரிச் சீர்திருத்தங்கள் மூலம் உண்டாகும் வரி இழப்பினை ஈடுகட்ட தமிழகத்திற்கு ரூ.2000 கோடி நிதி கேட்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


