அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தியானம், சின்னம்மா, ஆர்.கே. நகர் என எதுவாகினும் 2017ம் ஆண்டு சுத்த போர்தாங்க!

முன்னாள் முதல்வரின் திடீர் தியானம், தோழி சின்னம்மா ஆனது, சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு.. இறுதியாக ஆர்.கே.நகர் தேர்தல் என எத்தனையோ விறுவிறுப்பகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக 2017 சுத்த போர் என்றுதா

News image
Updated On :28 டிசம்பர் 2017, 8:50 am

DIN

முன்னாள் முதல்வரின் திடீர் தியானம், தோழி சின்னம்மா ஆனது, சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு.. இறுதியாக ஆர்.கே.நகர் தேர்தல் என எத்தனையோ விறுவிறுப்பகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக 2017 சுத்த போர் என்றுதான் தோன்றுகிறது.

2016ம் ஆண்டு பிரேக்கே இல்லாமல் பிரேக்கிங் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்களுக்கு, 2017ம் ஆண்டும் வழக்கம் போல ஜனவரியில்தான் பிறந்தது. ஆண்டு என்னவோ பரபரப்பாக துவங்கினாலும், அடுத்தடுத்த விறுவிறுப்புகளும் சேர்ந்து கொண்டேதான் இருந்தன.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, தமிழகத்தில் அரசியல் நாடகம் உச்ச கட்டத்தை அடைந்தது. ஜெயலலிதாவைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ததும், ஜெயலலிதா சமாதியில் திடீர் தியானம் மேற்கொண்டதும் பரபரப்பை அதிகரித்தது.

இதற்கு மற்றொரு புறம் உலகையே உற்று நோக்க வைத்த மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம்.

கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு, ஜெயலலிதா தோழி சசிகலா சின்னம்மாவானது, முதல்வர் கனவு பலிக்காமலேயே சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு, சிறைக்குப் பயணம், எடப்பாடி பழனிசாமி முதல்வரானது என ஓரளவுக்கு ஓய்ந்த செய்தி, இடையே, சிறையில் விஐபி வசதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அதிலேயே பாதி ஆண்டு கழிந்தது.

பிப்ரவரி மாதத்தில் எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கசிவு மீனவர்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியது நமக்கு சொந்தமான சோகக் கதை.

சட்டப்பேரவையில் நடந்த வாக்குவாதத்தில், முக ஸ்டாலின் சட்டைக் கிழிப்பு, ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இரு அணியினருக்கும் இடையேயான மோதல் என மறு பக்கம் அரசியலும் நாளுக்கு நாள் பரபரப்பைக் கூட்டிக் கொண்டே போயின. ஒரு இடத்தில், யார் யாருடைய ஆதரவாளர் என்றே தெரியாமல் பேட்டிகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர் மக்கள்.

எத்தனை நாட்கள் தான் மக்கள் அரசியலையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அடுத்து அவர்களது கவனத்தை திசை திருப்ப வந்ததுதான் ஜிஎஸ்டி. 2017ம் ஆண்டை ஜிஎஸ்டிக்கு முன்பு, ஜிஎஸ்டிக்கு பின்பு என மக்கள் வகைப் பிரிக்கும் அளவுக்கு வாட்டி வதைக்கப்பட்டு, பிறகு மத்திய அரசு அதில் சில தளர்வுகளை மேற்கொண்டது.

கடந்த ஆண்டு ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு போல, இந்த ஆண்டு ஜிஎஸ்டி என்று மக்களும் இதெல்லாம் பொதுவாழ்வில் சகஜமப்பா என்று எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவத்துக்கே வந்து விட்டிருந்தனர். 

அதோடு ஆதார் அட்டையைக் கையில் வைத்துக் கொண்டு பான் எண், செல்போன் எண், ஸ்மார்ட் கார்டு என பால் கார்டு தவிர பிற அனைத்து அட்டைகளுடனும் இணைக்க வரிசையில் நின்றே பலரின் பகல் பொழுதுகள் கழிந்தன. இந்த ஒரே ஒரு அட்டையை வைத்துக் கொண்டு நான் படும் பாடு இருக்கிறதே என்று ஆதார் கார்டு வாங்கியவர்கள் புலம்ப, ஆதார் அட்டை இல்லாதவர்களின் நிலை அதோ கதி.

இப்படி மக்கள் ஆதார் அட்டைக்கும், ஸ்மார்ட் கார்டுக்கும் அல்லாடிக் கொண்டிருந்த அந்த இடைவெளியில், அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை வெளியேற்றிவிட்டு, ஓ. பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிறகென்ன தியானம் செய்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் கிடைத்தது.

ஓரளவுக்கு தமிழக அரசு இரண்டு சக்கரங்களுடன் வேகமாக ஓடும் வேளையில் அவர்களது வேகத்துக்கு வேகம் சேர்க்கும் வகையில் இரட்டை இலைச் சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம். இனி எல்லாமே வெற்றி தான் என்று ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை சந்திக்கத் தயாரானது அரசு.

நவம்பரில் படு பயங்கரமாக துவங்கிய வடகிழக்குப் பருவ மழை, கன்னியாகுமரியை உரசிச் சென்ற ஒக்கி புயலோடு காணாமல் போனது. மழைக்கு பயந்து குடையும், ரெயின் கோட்டும் வாங்கியவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு பல முனைப் போட்டியை உருவாக்கிய நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற விடியோவை வெளியிட்டு முதல் நாளே சர்ச்சையை ஏற்படுத்தினார் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல். அந்த விடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களை வலியுறுத்தி, மக்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வராமல் தடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டது தேர்தல் ஆணையம்.

அடுத்து, 8 ஆண்டுகளாக நடந்து வந்த 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று தேர்தல் வரலாற்றுப் புள்ளி விவரங்களை புரட்டிப் பார்க்க வைத்தார்.

இப்படி எத்தனையோ பரபரப்புகளும், விறுவிறுப்பு சம்பவங்களும் வழக்கம் போல இடம்பெற்றாலும், மக்கள் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சுத்த போர் என்ற அளவிலேயே 2017 கடந்து சென்று விட்டது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.

ஒரு வேளை உங்கள் கருத்து வேறாகவும் இருக்கலாம். இருந்தால் அதனை கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.