ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நான்தான் தவறுதலாக சுட்டுவிட்டேன்: பெரிய பாண்டியன் குடும்பத்திடம் முனிசேகர் விளக்கம்

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை, நான்தான் தவறுதலாக சுட்டுவிட்டேன் என்று, அவரது குடும்பத்தாரிடம், ஆய்வாளர் முனிசேகர் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 6:03 am

DIN


நெல்லை: காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை, நான்தான் தவறுதலாக சுட்டுவிட்டேன் என்று, அவரது குடும்பத்தாரிடம், ஆய்வாளர் முனிசேகர் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில், நகைக் கடையில் கொள்ளையடித்து ராஜஸ்தான் தப்பிச் சென்ற கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற தனிப்படைக்கு தலைமை வகித்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, ஆய்வாளர் பெரியபாண்டியனுடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களை சுட்டுள்ளார். ஆனால் அது குறி தவறி பெரியபாண்டியன் மீது பட்டு அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், நெல்லையில் பெரிய பாண்டியன் குடும்பத்தினரிடம் காவல் ஆய்வாளர் முனிசேகர் விளக்கம் அளித்தார். ராஜஸ்தானில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பெரிய பாண்டியன் குடும்பத்தினரிடம் தனிப்படையினர் 5 மணி நேரம் விளக்கம் அளித்தனர்.

அப்போது, கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, நான்தான் தவறுதலாக பெரிய பாண்டியனை சுட்டுவிட்டதாகக் கூறிய முனிசேகர், அவரது குடும்பத்தினரிடம் மிகவும் வருந்தி மன்னிப்புக் கேட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.