சென்னை இன்று முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
காலை 10 மணியளவில் சசிகலா அண்ணா நினைவிடத்துக்கு வந்த சசிகலா, அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்களை பார்த்து கை கூப்பி வணங்கினார் . பின்னர் அங்கிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அங்கேயும் மரியாதை செலுத்தினார். அத்துடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி விட்டு அவர் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செலவம், அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், கே.ஏ. செங்கோட்டையன், பா. வளர்மதி, தமிழ்மகன் உசேன், பண்ருட்டி ராமச்சந்திரன், தம்பித்துரை, மாநில அமைச்சர்கள் மற்றும்காட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 77.01 லட்சம் பறிமுதல்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்
நெல்லை மாவட்டத்தில் 90 போ் போட்டி

எஸ்ஐஆா் பணியில் முறைகேடு நடந்ததாக அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி மனு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


