மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆளுநரின் தாமதம் குதிரை பேரங்களுக்கு வழி வகுத்து விடும்: திருமாவளவன் 

தமிழக அரசியல் சூழ்நிலையில் விரைந்து முடிவடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது குதிரை பேரங்களுக்கு வழி வகுத்து விடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ...

News image
Updated On :10 பிப்ரவரி 2017, 12:05 pm

DIN

சென்னை: தமிழக அரசியல் சூழ்நிலையில் விரைந்து முடிவடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது குதிரை பேரங்களுக்கு வழி வகுத்து விடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் தற்போது நிலவும் அதிகார சிக்கலுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

பெரும்பான்மையான பலம் யார் பக்கம் உள்ளது என்பதை உணர்ந்து நிலையான ஆட்சி அமைய வழி செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் தாமதம் செய்வது மோசமான குதிரை பேரங்களுக்கு வழி வகுத்து விடும்.

இவ்வாறு திருமாவளவன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.