சென்னை: கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் செல்வதை எதிர்க்கும் வகையிலான தர்ம யுத்தம் தொடரும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் நிலையற்ற தன்மைக்கு முடிவுக்கட்டும் விதமாக அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்துஇன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் அதிமுகப்பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்து எதிர்க்குரல் எழுப்பிய தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இதுவரை நாங்கள் எடுத்து வந்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இங்கு நேரடியாக வந்திருந்த கட்சியினர், மகளிர், இளைஞர்கள் ஆகிய அனைவருக்கும் பாதம் தொட்டு எனது நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.
அதிமுக கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் செல்வதை எதிர்க்கும் வகையில்தான் நாங்கள் இதுவரை போராடி வந்தோம்.
அநீதிக்கு எதிரான இந்த தர்ம யுத்தம் உங்கள் அனைவரின் ஆதரவுடன் தொடரும்
இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


