அதிமுக கொறடாவாக செம்மலையை நியமித்து மதுசூதனன் அறிவிப்பு
சட்டசபையில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதிமுக கொறடாவாக பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ...


சென்னை: சட்டசபையில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதிமுக கொறடாவாக பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செம்மலையை நியமித்து மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபையில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணியில் அவை முன்னவரான செங்கோட்டையன் அதிமுக கொறடாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் உத்தரவுப்படி அதிமுக எம்.எல் .ஏக்கள் முதல்வருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையியல் திடீர் திருப்பமாக அதிமுக அதிருப்தி அணியான பன்னீர்செல்வத்தின் சார்பில் கொறடாவாக பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலையை நியமித்து அவைத்தலைவர் மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...