சென்னை: அப்பல்லோ மருத்துவர் என்று கூறி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட பெண்ணை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூரை சேர்ந்தவர் ராமசீதா. இவர் தன்னை சென்னை அப்பல்லோ மருத்துவமமனையை சேர்ந்த பெண் மருத்துவர் என்று கூறிக் கொண்டு,கடந்த மாதம் சென்னையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்களின் தீபா பேரவை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்பொழுது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுதே சுய நினைவின்றிதான் இருந்தார் என்னும்படியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதனால் பெரும்பரபரப்பு உண்டானது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த சர்சைக்குரிய கருத்துக்களை கூறி மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்குவதாக அப்போல்லோ மருத்துவமனை சார்பாக சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராமசீதா மருத்துவரே இல்லை என்று தெரிய வந்தது. இதனால் போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


