புதுதில்லி: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு கிடையாது என மத்திய பெட்ரோலியத் துறை விளக்கம் அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தினசரி போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு கிடையாது. மிக குறைந்த நிலப்பரப்பில்தான் திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. மேலும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் 500 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த திட்டம் செயலப்படுத்தபடுவதன் மூலம் தமிழக அரசுக்கு ராயல்டி தொகையாக ரூ.40 கோடி கிடைக்கும்.அத்துடன் இதற்கு முன்பு செயல்படுத்தப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறு திட்டங்கள் மூலம் விவசாயத்திற்கு எந்த விதமான் பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்வாறு பெட்ரோலியத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


