பறவைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிக்கச் செய்யும் விதமாக, பொங்கல் பண்டிகையையொட்டி மூன்றாவது ஆண்டாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலோ, சுற்றுப்புறங்களிலோ தென்படும் பறவைகளைப் பார்த்து பட்டியல் தயாரித்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வழக்கம். இதன்மூலம், பல பொதுப் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும், பரவலையும் அறிந்து கொள்ள முடியும்.
இதுபோலவே, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு(GBBC - Great Backyard Bird Count) நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையின்போது பறவைகள் கணக்கெடுப்பை கேரள பேர்டர்ஸ்(Kerala Birders) குழுவினர் நடத்தினர்.
தமிழகத்தில்: கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதிலுமிருந்து நான்கு நாள்கள், அதாவது ஜனவரி 15- 18 ஆம் தேதி வரை 329 பறவைகள் குறித்த பட்டியல்கள், 85 பறவை ஆர்வலர்களால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த நாள்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட பறவைகளில், முதல் 10 இடங்களில் காகம், மைனா, மடையான், பச்சைக்கிளி, வெண்மார்பு மீன்கொத்தி, உண்ணிக்கொக்கு, மாடப்புறா, கரிச்சான், அண்டங்காக்கை முதலியவை இடம்பெற்றன.
எப்படி பட்டியலிடுவது: பொதுமக்கள் தாங்கள் பார்த்த பறவைகள் குறித்த தகவலை இணையத்தில் எப்படி பதிவேற்றம் செய்வது, பறவைகளைப் பார்த்தலின் நெறிமுறைகள், பறவைகளை அடையாளம் காண அவற்றின் தமிழ்ப் பெயர்களுடன்கூடிய படங்கள் முதலிய காட்சியளிப்புகள், விளக்கவுரைகள் உள்ளிட்ட விவரங்களை இந்தக் கணக்கெடுப்பை ஒருங்கிணைக்கும் இணையதளமான Birdcount.in இல் காணலாம். மேலும், பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புக்கு http:www.birdcount.ineventspongal-bird-countpongalbirdcount2017/tamil என்ற இணையதளத்தையும் பார்வையிடலாம்.
இதுகுறித்து பறவைகள் ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான பி.ஜெகந்நாதன் கூறியதாவது: பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் மக்களின் பங்கும், ஆதரவும் மிகவும் அவசியம். பறவைகளின் மேல் நாட்டம் வருவதற்கும், அவற்றின் மேல் கரிசனம் கொள்ளவும் இளைய தலைமுறையினரிடையே பறவைகள் பார்த்தல் (Bird watching) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதையொரு நல்ல பொழுதுபோக்காக அனைவரும் பாவிக்க மக்களிடையே எடுத்துச் சொல்வது அவசியம்.
பறவைகள் பற்றிய விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த பொங்கல் தினத்தன்று பறவைகளைப் பார்த்துக் கணக்கிட்டு, பட்டியலிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன், இதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நாம் வசிக்கும் பகுதியில் அல்லது ஓர் இயற்கையான வாழ்விடத்தில் இருக்கும் பறவைகளின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை முதலியவற்றைத் தொடர்ந்து நெடுங்காலத்துக்கு கண்காணித்து வருவதன் மூலம், அந்த இடத்தின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறியலாம்.
அதாவது, அங்கு வாழும் உயிரினங்களுக்கு அந்த இடம் வாழத் தகுந்ததாக இருக்கிறதா அல்லது சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறதா என்பதை பறவைகளின் எண்ணிக்கையையும், வகைகளையும் அடிப்படையாகக் கொண்டு அறிவியலாளர்கள் கணக்கிடுவர். பறவைகளைப் பற்றி தொடர்ந்து பல ஆண்டுகள் பதிவு செய்து வருவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களையும் கணிக்க முடியும் என்றார் ஜெகன்நாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்

4.4.1976: காமராஜுக்கு 'பாரத ரத்னா' விருது: அவரது சகோதரி ராஷ்டிரபதியிடம் பெற்றார்
வங்கி மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

