2017-18-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு ரயில் பயணிகளிடையே எழுந்துள்ளது.
எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு முதல் முறையாக ரயில்வே துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை கிடையாது. பொது நிதிநிலை அறிக்கையோடு, ரயில்வே நிதிநிலை அறிக்கை இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆகவே, ரயில்வே துறைக்கான பல்வேறு வளர்ச்சிகளும், புதிய திட்டங்களும் பொது நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கப்படவிருக்கிறது. இந்தாண்டிலாவது தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிடப்பில் திட்டங்களும், எதிர்பார்ப்புகளும்...: *2014-15-ஆம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் கன்னியாகுமரியில் அதி நவீன ரயில் முனையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தியிருந்தால் கிழக்கு கடற்கரை ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்திருக்கும். திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம், காரைக்குடி, சென்னை வரை அநேக ரயில் நிலையங்கள் உருவாகி, மத்திய அரசு உருவாக்கி வரும் குளச்சல் துறைமுகத்துக்கும், தூத்துக்குடி துறைமுகத்துக்கும் நேரடி தொடர்பு ஏற்படும். தொழில்வளம், சுற்றுலாத் துறை, அன்னிய முதலீடு பெருகியிருக்கும்.
*மதுரை - நாகர்கோவில், வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, நாகர்கோவில் - திருவனந்தபுரம் போன்ற இரட்டை ரயில் பாதைக்கு ரூ.540 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பானது உயிர்பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
*எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும் வியாழன்தோறும் இயங்கும் அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும்.
*நாகப்பட்டினம், வேளாங்கன்னி, தஞ்சாவூர் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் இருந்து நெல்லை, நாகர்கோவில், குமரி, திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு நேரடி ரயில் சேவை.
*திருவனந்தபுரம். கொச்சுவேலி, நாகர்கோவில் போன்ற இடங்களில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை.
முந்தைய நிதிநிலை அறிக்கையின் அறிவிப்புகள்: இந்த நிலையில், 2016-17-ஆம் ஆண்டு ரயில்வே நிதி நிலை அறிக்கையில், தமிழகத்துக்கு ரூ.2152 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் புதிய ரயில் பாதைக்கு ரூ.75.37 கோடி, அகல ரயில் பாதைக்கு ரூ.344 கோடி, இரட்டை ரயில் பாதைக்கு ரூ.530 கோடி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னை - தில்லி சரக்கு ரயில் பாதை, நாகை - வேளாங்கண்ணி ரயில் நிலைய மேம்பாடு, சென்னையில் ரயில் வாகன நிலையம் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை, விழுப்புரம்-செங்கல்பட்டு-திருச்சி-மதுரை இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெறும் நிலையிலுள்ளன.
"புதிய ரயில் திட்டங்கள் தேவை'
இதுகுறித்து தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் பொதுச் செயலர் சூசை ராஜிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
தென் மாவட்டங்களுக்குத் தேவையான ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டியது. இதனால், ஆயிரக்கணக்கான தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் அதிக கட்டணம் வசூல், அதிக சாலை விபத்துகள் போன்றவை அரங்கேறுகின்றன.
இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கல்வி, வேலை, வியாபாரம், சுற்றுலா சம்பந்தமாக சென்னை வந்துசெல்லும் தென் மாவட்ட மக்களுக்காக புதிய ரயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஏப். 9 வரை மழைக்கு வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைத்தான் திமுக முடித்துள்ளது! காட்பாடி அதிமுக வேட்பாளா்

4.4.1976: காமராஜுக்கு 'பாரத ரத்னா' விருது: அவரது சகோதரி ராஷ்டிரபதியிடம் பெற்றார்
வங்கி மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

