பிப்.2 முதல் கோவை, திரூப்பூர், நீலகிரி மாவட்ட மணல் லாரி உரிமையாளர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் வரும் பிப்.2ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்


கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் வரும் பிப்.2ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கரூர் அருகே காவரி ஆற்றில் உள்ள அரசு குவாரியில் தனியார் குத்தகைக்காரர்கள் குறிப்பிட்ட மணல் லாரிகளுக்கும் மட்டும் தொடர்ந்து தினமும் 1 லாரிக்கு 3 லோடு வீதம் மணல் தருவதாகவும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளுக்கு வாரம் ஒரு முறை 1 லோடு மட்டுமே வழங்குவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை, திரூப்பூர், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரரை எந்தவித நடவடிக்கை எடுக்காததை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இதனால் மணல் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மணல் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் கட்டுமானப் பணிகளும் பாதிக்கும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...