சசிகலா அணியினர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்கள் போலியானவை
"இரட்டை இலைச் சின்னம் உரிமை கோரும் விவகாரத்தில் சசிகலா தலைமையிலான அதிமுக அம்மா அணியினர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் பலவும் போலியானவை; இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது


"இரட்டை இலைச் சின்னம் உரிமை கோரும் விவகாரத்தில் சசிகலா தலைமையிலான அதிமுக அம்மா அணியினர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் பலவும் போலியானவை; இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அதிமுக எனும் கட்சிப் பெயரையும், அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தெரிவித்தது. இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணியினர் சின்னத்திற்கு உரிமை கோருவது தொடர்பாக பிரமாணப் பத்திரங்களை ஜூன் 16-க்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இரு அணியினரும் தத்தமது தரப்பில் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இவை தவிர, டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் அமைப்பாளர் தீபாவின் சார்பிலும் அதிமுகவுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அண்மையில் சசிகலா அணியினர் கூடுதல் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தனர். இச்சூழலில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வி.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன்ஆகியோர் வியாழக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் வி.மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தில் சசிகலா அணியினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களில் பெருவாரியானவை போலியானவை. போலியாக கையெழுத்திடப்பட்டவை. அதற்குரிய சில ஆதாரங்களைத் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம். மேலும், சசிகலா அணியினர் அளித்துள்ள பிரமாணப் பத்திரங்களின் உண்மைத் தன்மையை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளோம். மேலும், போலி பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்வது இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின்படி குற்றாகும்.
இதன் பின்னணியில் இருப்பவர்கள், பத்திரத்தைத் தயாரித்தவர்கள், அதில் கையெழுத்திட்டவர்கள் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும், கூடுதல் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய சசிகலா அணியினருக்கு தேர்தல் ஆணையம் அவகாசம் அளிக்கக் கூடாது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...